Tuesday 24 January 2017

பேனாப் பிரியர்



கண்களில் அடிக்கடி மின்னல் வெட்டும்
அவர் அவதானிப்புகள் பிரமிப்பூட்டும்
சில நொடிகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்வார்
சில நொடிகளுக்காக எதையும் இழப்பார்
கவிதைக்கு முன் அபுனைவு ஒன்றும் இல்லையென்பார்
கட்டுரைக்கு முன் புனைவு கைகட்ட வேண்டும் என்பார்
கதைகளுக்கு முன் அத்தனை இலக்கியமும் வீண் என்பார்
தேடித் தேடிப் படித்து நொடி நொடியாய் மாய்ந்து போகும்
இவரை என்ன சொல்வது

No comments:

Post a Comment