Tuesday 24 January 2017

நடு நிசி விளக்கு




நடு நிசியில் இருபதாவது தளத்தில்
ஒரு வீட்டில் சமயலறை விளக்கு ஒளிர்கிறது
கடைசி இரவுகளைத் தூங்கிக் கழிக்க விரும்பாத முதியவர் இரவைக் கடந்து கொண்டிருக்கலாம்
பச்சிளம் குழந்தைக்காகப் பால் கலக்கப்படலாம்
துணையின் பிரிவு யாரையேனும் வாட்டலாம்
அகலத் திறந்த சாளரங்கள் தற்கொலையைப் பரிசீலிக்கலாம்
கடல் கடந்த ஏக்கப் பெருமூச்சுத் தீண்டி
சேடியை வேலைக்கு நிர்பந்திக்கலாம்
வயதுவந்த பிள்ளைக்காக ஒரு தாய் காத்திருக்கலாம்
முதல் காதல் யாரையேனும் அச்சுறுத்தலாம்
என்னைப் போல் ஒளி மாசில் ஒளிந்திருக்கும் வின்மீனைகளைத் தேடலாம்
என் வீட்டு விளக்கு அணைக்கப்பட வேண்டும்
எனக்காக யாரேனும் பிராத்தனைச் செய்யக்கூடும்.



No comments:

Post a Comment