Monday 23 January 2017

இரவின் மொழி



பச்சை வண்ணச் சாயம் பூசிய
இரும்பு இருக்கை
மைதானத்தின் ஒற்றை இதழ்ப் பூவாய்
பனித் துளிகளை உதிர்க்கிறது.
ஒளியின் வேகத்தைப் போல்
இருக்கை, இயங்கியும் ஸ்தம்பித்தும்
கதைகளைத் தியனிக்கிறது.
இருக்கை, களன் மாறும் மனிதச் சந்திப்புகளாய்
கருக்களை வித்தரித்து
மண்ணையும் மணத்தையும் புதுப்பிக்கிறது.
மொழிகளைக் கடந்து
மனிதர்களின் கதைகளையும் மொழிகள் இழைந்த
மைதானத்தின் கதையும் மின்னல்களுடனும் மேகத்துடனும்
சதா பரிமாறப்படுகின்றன.
வீட்டை மறந்த வயோதிகனைப் போல
விளக்குக் கம்பங்கள் ஒளிரும்
நடு நிசிப் பொழுதில்
இருக்கை கதைகளை
நகரம் முழுவதும் உமிழத்தொடங்குகிறது
நகரத்தின் கண்கள் இமைக்கின்றன
வட்ட வடிவ இலைக் கொண்ட மரத்தில் இருந்து

பறக்கும் சிட்டுக்குருவியென...
2015

No comments:

Post a Comment